முகக்கவசம் அவசியம் இல்லை என்ற தீர்மானத்தை மீளாய்வு செய்யுங்கள் - விசேட கோரிக்கை
Ministry of Health Sri Lanka
Channa Jayasumana
By Kanna
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியமில்லை என நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தை, மீளாய்வுக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.
இதன்படி, முகக்கவசம் அவசியமில்லை என்ற தீர்மானம் கடந்த 19 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் , இந்தத் தீர்மானத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு நிபுணர் குழுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி