புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு : பரீட்சை ஆணையாளர் எடுத்த அதிரடி முடிவு
கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியான நிலையில் அந்த பரீட்சையின் முதலாம் வினாத்தாளின் மூன்று கேள்விகளை நீக்குவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் உள்ள மூன்று வினாக்களைப் போன்று மூன்று கேள்விகளை அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாதிரித் தாள் மூலம் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மூன்று வினாக்களை நீக்க தீர்மானம்
அதன்படி இன்று புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளை தயாரித்த குழு ஒன்று கூடி கலந்துரையாடப்பட்டு அது தொடர்பான மூன்று வினாக்களை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாளை (18) புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்லவுள்ளதாகவும், அவர்களின் அறிக்கையின் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(amith jayasundara) தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |