கோதுமை மாவின் விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்
பிரீமா(Prima) மற்றும் செரண்டிப்(Serendib) நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கோதுமை மாவின் விலை குறைப்பினால் பேக்கரி உணவு பொருட்களின் விலை குறைக்கப்படும் என தான் நம்புவதாக செரண்டிப் மா ஆலையின் நிர்வாகி கலிங்க விஜேசேகர தெரிவித்துள்ளார்.
2025 - வரவு செலவுத் திட்டம்
இதேவேளை, எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான மானிய நடவடிக்கையாக பண்டிகைக் காலத்திற்கான உணவுப் பொதி ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் இன்று (17) இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்