ஓகஸ்ட் மாதத்தில் குறைவடைந்த இலங்கையின் பணவீக்கம்
Sri Lanka
Sri Lanka Inflation
Economy of Sri Lanka
By Sathangani
2024 ஜூலை மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கம் வெளியாகியுள்ளது.
இதனை சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics) வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ஜூலை 2024 இல் 2.5% ஆக இருந்த பணவீக்கம் ஓகஸ்ட் 2024 இல் 1.1% ஆகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவு வகை பணவீக்கம்
மேலும் ஜூலை 2024 இல் 2.9% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் ஓகஸ்ட் 2024 இல் 2.3% ஆகக் குறைவடைந்துள்ளது.
மேலும், 2024 ஜூலையில் 2.2% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் ஓகஸ்ட் 2024 இல் 0.2% ஆகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 13 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்