டெல்லி குண்டு வெடிப்பு குறித்து சஜித்தின் பதிவு: வெடித்த சர்ச்சை
டில்லி கார் குண்டு வெடிப்பு குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பதிவொன்று தற்போது பகிரப்பட்டு வருகின்றது.
டில்லி கார் குண்டு வெடிப்பு ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என எக்ஸ் தளத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவை நேற்று (10) இரவு 9.07 மணிக்கு அவர் பதிவிட்டுள்ளார்.
கொடூரமான தாக்குதல்
அந்த பதிவில் அவர் தெரிவித்திருந்ததாவது, “புது டெல்லியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்.

பயங்கரவாதத்தின் கொடூரத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
இந்த கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் கவலையை தெரிவித்துக் கொள்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம்
இந்தநிலையில், சஜித் பிரேமதாச செய்தியை வெளியிட்ட நேரத்தில் இந்திய அரசாங்கம் குறித்த குண்டுவெடிப்பை பயங்கரவாத தாக்குதல் என அறிவித்திருக்கவில்லை.

இதையடுத்து, நேற்று (10) இரவு 9.42 மணிக்கே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த குண்டு வெடிப்பு தொடர்பில் பதிவொன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த பதிவில் அவர் மேலும் தெரிவித்திருந்தாவது, “இன்று மாலை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள்.
பயங்கரவாத தாக்குதல்
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமையை மதிப்பாய்வு செய்தேன்” என அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நரேந்திர மோடியின் பதிவு வெளியான நேரத்தில் கூட டெல்லி குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல் என்பதை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை.
எவ்வாறாயினும், இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அறிவித்தலுக்கு முன்னரே இலங்கையின் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச குறித்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதால் என பதிவிட்டமை சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |