முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக கைது : டெல்லியில் பரபரப்பு
Delhi
India
Arvind Kejriwal
By Sumithiran
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை இன்று வியாழக்கிழமை இரவு அமுலாக்கத் துறை கைது செய்தது. இதனால், டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமுலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரம் விசாரணையில் ஈடுபட்டனர். அதன்பின், அதிரடியாக கைது செய்யப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
இந்திய முதலமைச்சர் ஒருவர் பதவியில் இருக்கும்போதே
இதனிடையே, ஆம் ஆத்மி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருவதால், காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய முதலமைச்சர் ஒருவர் பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி