இந்தியத் தலைநகரில் வரலாறு காணாத மழைபொழிவு - 50 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

Delhi Weather
By Mathu Jul 10, 2023 10:39 AM GMT
Report

இந்தியத் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுமையான மழைபொழிவு வார இறுதியில் பதிவாகியுள்ளது.

மழை வெள்ளம் மின்னல் தாக்குதல் மற்றும் நிலச்சரிவுகளால் வட இந்திய மாநிலங்களில் இதுவரை 50க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை

இந்தியத் தலைநகரில் வரலாறு காணாத மழைபொழிவு - 50 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு | Delhi Is Struggling With Highest Rain

இந்தியாவில் வடமாநிலங்களான உத்தரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவற்றில் விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கைளின் பின்னணியில் கடும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை அதன் 75 மாவட்டங்களில் 68 மாவட்டங்களில் கடுமழை பெய்துள்ள நிலையில் அங்கு 34 பேர் பலியாகியுள்ளனர்.

இவர்களில் 17 பேர் மின்னல் தாக்குதலில் பலியாக ஏனையோர் மழை நீரில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் நேற்று 153 மில்லிமீற்றர் அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

1982 ஆம் ஆண்டுக்குப் பின்

இந்தியத் தலைநகரில் வரலாறு காணாத மழைபொழிவு - 50 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு | Delhi Is Struggling With Highest Rain

இது 1982 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நகரத்தில் ஒரேநாளில் பெய்த அதிகளவு மழையாகவும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய வட மாநிலங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கைகள் வெளியிட்டப்பட்டதுடன் பொதுமக்கள் தங்களின் நடமாட்டங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்தன.

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை, பியாஸ் ஆற்றின் அருகே வெள்ளத்தில் மூழ்கிய விடுதியொன்றில் இருந்து 27 பேர் மீட்கப்பட்டனர்.

பருவ மழைக்குரிய காலப்பகுதி

இந்தியத் தலைநகரில் வரலாறு காணாத மழைபொழிவு - 50 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு | Delhi Is Struggling With Highest Rain

கடும் காரணமாக உத்தரபிரதேசம், புது தில்லி உள்ளிட்ட பல பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரை வழமையாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையாக காலப்பகுதி பருவமழைக்குரிய காலப்பகுதியாகும்.

இந்தமுறை கடுமையான கோடைகாலத்தின் வெப்ப அலைகளால் நாடு பாதிப்படைந்த நிலையில் கடந்த மாதம், வடகிழக்கு இந்தியாவில் ஏறக்குறைய 5 லட்சம் மக்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025