வேகமெடுக்கும் டெங்கு : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக டெங்கு நோய்த்தொற்றினால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த வருடத்தின் (2024) இதுவரையான காலப்பகுதியில் 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மழையுடனான காலநிலை
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4,532 டெங்கு நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 1,936 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் டெங்கு நோய் தாக்கங்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்குமாறும் நுளம்பு பரவும் சாத்தியமற்றவாறு சூழலை சுத்தமாக பேணுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |