இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு மரணங்கள்! 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் பதிவு
இலங்கையில் டெங்கு நோயின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 47 மரணங்கள் பதிவாகி உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 67,174 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தின் முதல் 09 நாட்களில் மட்டும் 10,685 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்பு
அத்துடன் நேற்று (10) ஒரே நாளில் மட்டும் சுமார் 1,110 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல முக்கிய வைத்தியசாலைகளின் கொள்ளளவு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.
புதிய நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை வழங்குவதிலும் சிரமங்கள் உருவாகியுள்ளதுடன், மருத்துவர்களும் அதிக பணிச்சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் உள்நோயாளர் விடுதிகளில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |