நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் டெங்கு
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 44,480 ஆகப் பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்கான விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நோய் பரவக்கூடிய அபாயம்
இதன் ஒரு கட்டமாக, வவுனியா மாவட்டத்தைப் பாதுகாப்பதற்கான விசேட ஒழிப்புத் திட்டம், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில், இன்று காலை வவுனியா ஈரட்டபெரியகுளம் பகுதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி, வவுனியா பொது வைத்தியசாலையில் 5 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளனர்.
நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும், ஈரட்டபெரியகுளம் பகுதியில் நோய் பரவக்கூடிய அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |