தவறான முறைக்குட்படுத்தப்பட்ட மகள்...! மனவேதனையில் தந்தை உயிர்மாய்ப்பு - மட்டுவில் கொடூரம்

Sri Lanka Sri Lanka Police Investigation Child Abuse Law and Order
By Bavan Jun 19, 2026 01:15 AM GMT
Report

மட்டக்களப்பில் தனது மகள் நபரொருவரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதை அறிந்த தந்தை, தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் காத்தான்குடி காவல் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் வசித்துவரும் 54 வயதுடைய ஆண் ஒருவர், அதே வீதியிலுள்ள 12 வயது சிறுமியின் வீட்டுக்கு வழக்கமாகச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த 12 வயதுடைய சிறுமியின் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார்.

யாழிலிருந்து இந்தியாவிற்குத் தங்கம் கடத்திய சம்பவம் குறித்த விசாரணை...! நீதிமன்றின் உத்தரவு

யாழிலிருந்து இந்தியாவிற்குத் தங்கம் கடத்திய சம்பவம் குறித்த விசாரணை...! நீதிமன்றின் உத்தரவு

சிறுமியின் தாயார்

அப்போது அந்தச் சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில் சிறுமியும் அவரது நண்பியான பக்கத்து வீட்டைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியும் தனிமையில் இருந்துள்ளனர்.

இதன்போது சிறுமியின் பெற்றோர் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குறித்த நபர், அந்த 12 வயதுச் சிறுமியைத் தவறான முறைக்கு உட்படுத்தியதுடன் பக்கத்து வீட்டு 10 வயதுடைய சிறுமியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார்.

தவறான முறைக்குட்படுத்தப்பட்ட மகள்...! மனவேதனையில் தந்தை உயிர்மாய்ப்பு - மட்டுவில் கொடூரம் | Kattankudy Minor Abuse Father Death Case

இதையடுத்து அந்தப் பத்து வயதுச் சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதன் பின்னர் 12 வயதுச் சிறுமிக்கு நடந்ததை பார்த்த பக்கத்து வீட்டு 10 வயது நண்பியான சிறுமி, பாடசாலையில் அவரைப் பகிடி (கேலி) செய்து வந்துள்ளார்.

இந்த விபரம் ஆசிரியருக்குத் தெரியவந்ததையடுத்து அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை அழைத்து விடயத்தைத் தெரியப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க ஒப்பந்தத்திற்கு ஈரான் உச்ச தலைவர் பச்சைக்கொடி!

அமெரிக்க ஒப்பந்தத்திற்கு ஈரான் உச்ச தலைவர் பச்சைக்கொடி!

பாதிக்கப்பட்ட சிறுமி

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புதன்கிழமை (17-06-2026) காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருமணம் முடித்து மனைவியை விவாகரத்து செய்துள்ளவரும் ஒரு கையும் காலும் இயங்காத நிலையில் உள்ளவருமான 54 வயதுடைய விசேட தேவையுடைய குறித்த சந்தேகநபரை நேற்று (18-06-2026) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தவறான முறைக்குட்படுத்தப்பட்ட மகள்...! மனவேதனையில் தந்தை உயிர்மாய்ப்பு - மட்டுவில் கொடூரம் | Kattankudy Minor Abuse Father Death Case

பின்பு பாதிக்கப்பட்ட சிறுமிகளை மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட 12 வயதுச் சிறுமியின் தந்தையார் தனது மகளுக்கு நடந்த கொடூரத்தையும் அவமானத்தையும் தாங்க முடியாமல் நஞ்சு அருந்தி உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் நேற்று (18-06-2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குறித்த பிரதேச காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, ஏற்கனவே ஒரு கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதும் அவர் மாதத்தில் ஒரு நாள் காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனடாவிற்குச் செல்வோருக்கு அமெரிக்கா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடாவிற்குச் செல்வோருக்கு அமெரிக்கா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025