வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட பெருமளவு இலங்கையர்
இலங்கைக்கு வர முடியாத நிலையில், குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் நேற்று (04) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் இலங்கைக்கு வர முடியாமல் குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்குழுவில் ஒரு ஆண் வீட்டுப் பணியாளரும் 34 வீட்டுப் பணியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை வீட்டுப் பணியாளர்கள்
குவைத் மாநிலத்திலுள்ள இலங்கைத் தூதரகம், உள்விவகார அமைச்சு, குடிவரவுத் திணைக்களம், நீதி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் இந்த இலங்கை வீட்டுப் பணியாளர்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.
அங்கு, இந்த ஊழியர்களுக்கு எதிரான வழக்குகள் தீர்க்கப்பட்டு, தற்காலிக கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு, விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு சம்பளம் மற்றும் பிற சலுகைகளை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை இலங்கை தூதரகம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்