வெளிநாடொன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கை பெண் : வெளியான அதிர்ச்சி தகவல்
மாலைதீவு நாட்டில் உள்ள விருந்தினர் இல்லத்தில் பணியமர்த்தப்பட்ட இலங்கைப் பெண்மணியொருவர் சிசுக்கொலை செய்ததாகக் கூறப்படும் நிலையில் கைது செய்யப்பட்டதாக மாலைதீவு காவல்துறை பேச்சாளர் யூனுஸ் சோபா தெரிவித்தார்.
தகவல்களின்படி, அந்த பெண்மணி இரகசியமாக குழந்தையை பிரசவித்து, அதனை ஒரு பைக்குள் விட்டுச் சென்றுள்ளார், பின்னர் அது குப்பை கிடங்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனையில் வெளியான தகவல்
“குழந்தையை பரிசோதித்த மருத்துவ வல்லுநர்கள், குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் ஏற்கனவே இறந்துவிட்டதாக முடிவு செய்தனர்.
இதனையடுத்து சட்ட அமுலாக்க அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுத்து, விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் குறித்த பெண்ணை கைது செய்தனர், ”என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை முடிவடையும் வரை விளக்கமறியலில்
இன்று திங்கட்கிழமை குறித்த பெண்ணை குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவரை விசாரணை முடிவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
