ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு :கடற்படை துணைத்தளபதியை போட்டு தள்ளியது உக்ரைன்..!
ரஷ்ய கடற்படையின் துணைத் தலைவர் உக்ரைன் எல்லைக்கு அருகே கொல்லப்பட்டதாக ரஷ்ய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
மார்ச் மாதம் ஜனாதிபதி விளாடிமிர் புடினால் மூத்த கடற்படை பதவிக்கு நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் மிகைல் குட்கோவ், உக்ரைனின் சுமி பிராந்தியத்தின் எல்லையான மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் "போர் பணி"யில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தபோதும் இந்த நடவடிக்கை குறித்து அமைச்சகம் மேலதிக விவரங்களை வழங்கவில்லை.
மொஸ்கோவிற்கு ஏற்பட்ட மிக உயர்ந்த இழப்பு
குட்கோவின் மரணம், உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து மொஸ்கோவிற்கு ஏற்பட்ட மிக உயர்ந்த இழப்புகளில் ஒன்றாகும்.

ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள பிரிமோர்ஸ்கி பிராந்தியத்தின் ஆளுநர் ஒலெக் கோசெமியாகோவின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தில் மேலும் பத்து பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் அதிகாரபூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை
கோசெமியாகோ டெலிகிராமில் இந்த அறிவிப்பை வெளியிட்டார், அங்கு குட்கோவை "தனது கடமையைச் செய்யும் போது" இறந்த ஒரு விசுவாசமான அதிகாரி என்று விவரித்தார்.
இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிகாரபூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 1 மணி நேரம் முன்