பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் பறந்த எழுத்து மூல கடிதம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) மற்றும் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் (Sajith Premadasa) சபாநாயகர் எழுத்து மூலம் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandu Tennakoon) எதிராக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர் ஒருவரை நியமிக்க பெயர் ஒன்றை பரிந்துரைக்குமாறு சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை ஆணைக்குழு
சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாடாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளின்படி, இந்தக் குழுவிற்கு ஒரு உறுப்பினரை நியமிப்பது பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குழுவிற்கு மொத்தம் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும், இதில் ஒரு உறுப்பினர் பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட வேண்டும்.
மேலும், காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் இந்தக் குழுவின் நிரந்தர உறுப்பினராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
