பாதாள உலகத் தலைவர்களை விட ஆபத்தானவர் தேசபந்து தென்னகோன் : வெளியான அதிர்ச்சி தகவல்

Matara Sri Lanka Magistrate Court Deshabandu Tennakoon
By Jaso Mar 20, 2025 09:06 AM GMT
Report

 முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன்(deshabandu tennakoon), ஹரக் கட்டா மற்றும் மாக்கந்துரே மதுஷை விட ஆபத்தான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்(Dileepa Peeris) நேற்று(19) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோன் காவல் துறையில் பணியாற்றும் போது தனிப்பட்ட இலாபத்திற்காக தனது அதிகாரத்தை பரவலாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக வழக்குத் தொடுப்புக்காக முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார்.

குற்றவாளிகளை விட மோசமானவர்

 "அவர் ஒரு பேயைப் போல சமூகத்தில் வாழ்ந்து வருகிறார். அவர் 'ஹரக் கட்டா' மற்றும் 'மாக்கந்துரே மதுஷ்' போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை விட மோசமானவர். அவர் தனது அதிகாரத்தை பரவலாக துஷ்பிரயோகம் செய்துள்ளார். எனவே, விசாரணைகள் முடியும் வரை அவரை பிணையில் விடாமல் விளக்கமறியலில் வைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று பீரிஸ் கூறினார்.

பாதாள உலகத் தலைவர்களை விட ஆபத்தானவர் தேசபந்து தென்னகோன் : வெளியான அதிர்ச்சி தகவல் | Deshabandu Is More Dangerous Than Harak Kata

தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் சரணடைந்ததை அடுத்து, இன்று (20) வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை தலைமை நீதவான் உத்தரவிட்டார். கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக சட்ட நடைமுறையை தவிர்த்து வந்த தென்னகோன், நேற்று முன்னதாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நீதிமன்றத்தில் வாதங்களைமுன்வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பீரிஸ் கூறியதாவது:

சற்றுமுன்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட தேசபந்து தென்னகோன்!

சற்றுமுன்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட தேசபந்து தென்னகோன்!

காவல்துறை கான்ஸ்டபிள் பதவிக்கு கூட தகுதியற்றவர்

" கடந்த 20 நாட்களாக அதிகாரிகள் இந்த நபரைத் தேடி வருகின்றனர். இருப்பினும், அவர் பிடிபடுவதைத் தவிர்த்து, திடீரென இந்த நீதிமன்றத்தில் யாரும் கவனிக்காமல் முன்னிலையானார்.. இது விசாரிக்கப்பட வேண்டும். அவர் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் பதவிக்கு கூட தகுதியற்றவர், ஐஜிபி பதவிக்கு ஒருபுறம் இருக்கட்டும். இது காவல்துறை அதிகாரிகளுக்கு அவமானம்" என்று பீரிஸ் கூறினார்.

பாதாள உலகத் தலைவர்களை விட ஆபத்தானவர் தேசபந்து தென்னகோன் : வெளியான அதிர்ச்சி தகவல் | Deshabandu Is More Dangerous Than Harak Kata

தேசபந்து தென்னகோனுக்கு எட்டு வீடுகள் சொந்தமாக உள்ளன என்றும், 2020 முதல் அவரது பெயர் வாக்காளர் பதிவேட்டில் இடம்பெறவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பீரிஸ் மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தென்னகோன் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி வழக்கறிஞர் ஷனக ரணசிங்க, தனது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.

 சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், பிணை தொடர்பான முடிவு மார்ச் 20 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அருண் இந்திரஜித் புத்ததாச தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் தேசபந்துவிற்கு சம்பளம்: வெளியான அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் தேசபந்துவிற்கு சம்பளம்: வெளியான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்