இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் தேசபந்துவிற்கு சம்பளம்: வெளியான அறிவிப்பு
தேசபந்து தென்னேகோனுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் சம்பளம் வழங்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் முற்றாக மறுத்துள்ளது.
நாடாளுமன்ற விவாதம் ஒன்றின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே, அப்போதைய காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ரூ. 150,000 சம்பளம் வழங்கியதாகவும், அவருக்கு மடிக்கணினி, தொலைபேசிகள் மற்றும் பிற சலுகைகளை வழங்கியதாகவும், இந்த நடவடிக்கைகள் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், தென்னகோனுக்கு எந்தப் பணமும் அல்லது சலுகைகளும் வழங்கவில்லை என்று கூறி, அந்தக் கூற்றுக்களை மறுத்துள்ளது.
கண்டனம்
எனினும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மூத்த காவல்துறை அதிகாரிகள் உட்பட பாதுகாப்புப் பணியாளர்களுடன் வழக்கமாக இணைந்து செயற்படுதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், நிறுவனத்தின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகேவின் கருத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்