இஸ்ரேல் படைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : ஹமாஸ் வெளியிட்ட காணொளி
காசா மீது தரைத்தாக்குதலை முன்னெடுத்துவரும் இஸ்ரேலிய இராணுவத்தின் 136 இராணுவ வாகனங்களை கடந்த 10 நாட்களில் தாம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழித்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் இராணுவப் பேச்சாளர் அபு ஒபைடா புதன்கிழமை மாலை இது தொடர்பில் தெரிவிக்கையில்,
136 இஸ்ரேலிய இராணுவ வாகனங்களை
கடந்த 10 நாட்களில் 136 இஸ்ரேலிய இராணுவ வாகனங்களை பாலஸ்தீனிய எதிர்ப்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழித்துள்ளதாக அறிவித்தார்.
Al-Qassam Brigades released a video documenting the Resistance attacks at invading Israeli forces and vehicles. pic.twitter.com/Q2uIFGl80k
— The Palestine Chronicle (@PalestineChron) November 8, 2023
"சியோனிச எதிரி மனிதர்கள் மற்றும் விலங்குகள் உட்பட அனைத்தையும் அதன் வழியில் கொல்கின்றது" என்றும் அபு ஒபேடா கூறினார்.
பணயக் கைதிகளை பரிமாறத் தயார்
இஸ்ரேலில் சிறைபிடிக்கப்பட்டவர்களை பாலஸ்தீன கைதிகளுடன், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முதியோர் கைதிகளுடன் பரிமாறிக்கொள்ள தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.