ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் விமானத்தை அழித்தது இஸ்ரேல்
Missile
Israel
Iran
Flight
Ayatollah Ali Khamenei
By Sumithiran
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனி பயன்படுத்திய விமானத்தை தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தில் இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில் அழித்துவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆயுதங்களை வாங்குவதற்கும் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் இந்த விமானத்தை மற்ற உயர் ஈரானிய அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் பயன்படுத்தியதாக அது கூறுகிறது.
ஈரானின் 70 வீத ஏவுகணைகள் அழிப்பு
அத்துடன் இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்று ஈரானில் உள்ள ஏவுகணைகளை அழிப்பதாகும்.

இவற்றில் 70% இப்போது அழிக்கப்பட்டுவிட்டதாக அல்லது பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஒரு இஸ்ரேலிய அறிக்கை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |