தமிழின அழிப்புக்கு நீதிகோரி புறப்பட்ட அறவழிப்பயணம் - ஐ. நா முன்றலில் முடிவு
இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு நீதிகோரியும், சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டியும் இன்று நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மனிதநேய மிதிவண்டிப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா ஐக்கிய நாடுகள் அவை நோக்கி நகரும் இந்தப் பயணம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜெனீவா அரங்கில் இடம்பெறும் கவனயீர்ப்பு போராட்டத்துடன் நிறைவுபெறவுள்ளது.
இலங்கையில் தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக்கோரியும், தமிழர்களுக்குரிய நிரந்தர தீர்வை வலியுத்தியும் நெதர்லாந்தின் டென்ஹாக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற முன்றலில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இந்தப் பயணம் ஆரம்பமாகியுள்ளது.


இந்தப் பயணத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை பெல்ஜியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியஆணையக முன்றலில் ஒன்றுகூடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
காலை 9 மணி தொடக்கம் பி.ப 4 மணிவரை அங்கு இடம்பெறும் கவனயீர்ப்பு போராட்டங்களுடன் அரசியல் சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன.

இந்தப் பயணத்தின் இறுதி தரிப்பு எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஐ.நா மனித உரிமை பேரவை முன்றலில் பெரும் எழுச்சியுடன் நடத்தப்படும் என்பதுடன், கவனயீர்ப்பு போராட்டத்துடன் முடிவடையுவுள்ளது.