ஆட்டுப்பாலில் சவர்க்கார உற்பத்தி - யாழில் அசத்தும் இளைஞன்!
Sri Lankan Tamils
Jaffna
By Pakirathan
யாழ்ப்பாணத்தில் ஆட்டுப்பாலினை பயன்படுத்தி சவர்க்காரம் மற்றும் சம்போ உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முகத்தை பொலிவாகவும், இளமையாவும் வைத்திருக்கும் மருத்துவக்குணங்கள் பலவற்றை கொண்டதாக இந்த சவர்க்காரம் காணப்படுகிறது.
இந்த சவர்க்கார உற்பத்தி நிலையமானது யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ளது.
நன்மைகள்
உடலுக்கு தீங்கிழைக்கும் எந்தவித இரசாயனங்களும் இல்லாமல், சருமத்திற்கு பல நன்மைகள் தரும் வகையில் இந்த சவர்க்கார உற்பத்திகளை செய்கிறோம் என இதனை உற்பத்தி செய்யும் இளைஞர் தெரிவிக்கின்றார்.
இயந்திரங்கள் இருந்தாலும் நாங்கள் இந்த உற்பத்திகளை மனித வலுவினை கொண்டே மேற்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்