கிறிஸ்தவ புனிதராகும் முதல் தமிழர்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி - நட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு பாப்பரசர் பிரான்ஸிஸ் புனிதர் பட்டம் வழங்கியுள்ளார்.
இன்று வத்திக்கான் நகரில் வைத்து அவருக்குான பட்டம் வழங்கப்பட்டது.
இவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று தமிழக கத்தோலிக்க திருச்சபை சார்பிலும், கோட்டார் மறைமாவட்டம் சார்பிலும், இறைமக்கள் சார்பிலும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வத்திக்கானில் உள்ள புனிதர் பட்டமளிப்பு பேராயத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இது நீண்ட காலமாக கிடப்பில் இருந்த நிலையில் 2012இல் தேவசகாயம் முக்திப்பேறு பெற்றவர் (அருளாளர்) என அறிவிக்கப்பட்டது.
கடந்த 2021இல் மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குவதாக அறிவிப்பு வெளியானது.
அதன்படி வத்திக்கானில் உள்ள சென்ட் பீட்டர் சதுக்கத்தில் இன்று மதியம் மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டத்தை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கினார்.
இதன்மூலம் புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
