நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட தேசபந்து தென்னகோன்!
புதிய இணைப்பு
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமாக தாக்குதல் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்றையதினம் குற்றப்புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட தேசபந்து தென்னகோன் கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு இன்னும் சற்று நேரத்தில் அழைத்து வரப்படவுள்ளதாக எமது செய்தியாளார் தெரிவித்துள்ளார்.
செய்திகள் - டில்ஷான் வின்சன்
முதலாம் இணைப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) இன்று (21.08.2025) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
2022 ஆம் ஆண்டு காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் நேற்று (20.08.2025) கைது செய்யப்பட்டார்.
முன்னாள் காவல்துறை மா அதிபர்
முன்னதாக, தம்மைக் கைது செய்வதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி அவர் தாக்கல் செய்த முன்பிணை மனுவை, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர நிராகரித்திருந்தார்.
இதனையடுத்து, போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவத்தில் சந்தேக நபர் எனப் பெயரிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
