மகா சிவராத்தி : திருக்கேதீஸ்வரத்தில் குவிந்துள்ள இலட்சக்கணக்கான பக்தர்கள்
வரலாற்றுப் புகழ் பெற்ற நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார் (mannar)திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்று வருகின்ற நிலையில் உலகம் முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை மாத்திரம் இன்றி உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள்ள மகா சிவலிங்கத்திற்கு வார்த்து நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக்கடனை இன்று (26) அதிகாலை தொடக்கம் செலுத்தி வருகின்றனர்.
பல்வேறுபட்ட இந்து கலாசார நிகழ்வுகள்
மேலும் மகா சிவராத்திரி நிகழ்வை ஒட்டி விசேட போக்குவரத்து சேவைகள்,குடிநீர்,சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட இந்து கலாசார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
எட்டு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள்
இன்றைய தினம் இரவு விசேட பஜனைகள் மற்றும் நிகழ்வுகளும் இடம் பெற்றது. அதே நேரம் இம்முறை சிவராத்திரி நிகழ்வுக்கு என விசேட காவல்துறை,இராணுவ அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து சுமார் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |










ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 8 மணி நேரம் முன்
