வெளிநாடொன்றில் பற்றி எரிந்த விமான நிலையம்!
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தீ விபத்து இன்று (18) இடம்பெற்றுள்ளது. இதனால் அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு வாகனங்கள்
தீவிபத்தைத் தொடர்ந்து நிகழ்விடத்துக்கு பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.
இதையடுத்து, இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் எல்லைக் காவல்படை ஆகியவற்றின் பணியாளர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மறு அறிவிப்பு
அத்தோடு, பாதுகாப்பு கருதி அனைத்து விமானச் சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், அனைத்து விமானங்களும் தரையிறங்குவதும் புறப்படுவதும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளர் தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
