பல்டியடித்தார் தம்மிக்க பெரேரா
தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதம்மிக்க பெரேரா தொடர்ந்தும் அந்தப் பதவியில் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தாம் இதுவரை அறிவிக்கவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எனவே, அவர் வெளியேறிய பின்னர் யாரை நியமிப்பார்கள் என்பதை இப்போது கூற முடியாது எனவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பதவி விலகவேண்டும்
இதேவேளை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்தவேளை நிதியமைச்சையும் தம்வசம் வைத்திருந்தார்.இதன்போது நிதியமைச்சு பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க பதவி விலகவேண்டுமென தம்மிக்க பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பசில் ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து தொழில் அதிபரான தம்மிக்க பெரேரா தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசித்திருந்தார்.
