துவாரகா காணொளி ராஜபக்சக்களுக்கு ஆதாயம்: புலிக்காய்சல் பேரினவாதத்துக்கு புதிய தீனி..!(காணொளி)
அண்மையில் துவாரகா எனக் கூறப்படும் பெண்ணால் வெளியிடப்பட்ட காணொளியை ராஜபக்சக்கள் தமக்கு சாதகமாக கையில் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
எனென்றால் சிங்கள பௌத்த பேரினவாத வாக்கு வங்கிகளுக்கு முன்னால் தமது புலிக்காய்ச்சலை இன்னும் தீவிரப்படுத்தும் வகையில் இந்த விடயத்தை அவர்கள் கட்சிதமாக பயன்படுத்தக் கூடும்.
குறிப்பாக துவாரகா என்ற அடயாளத்தினால் வழங்கப்பட்ட செய்தியில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும் தமிழர் தாயகத்தின் சுதந்திரத்திற்கான அபிலாஷனைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதால் போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும் எனவும் என்றோ ஒருநாள் தமிழீழ தயாகம் திரும்பி அங்கு மக்களோடு இருந்து மக்களுக்கான பணிகளை செய்வதற்கு காலம் வாய்ப்பளிக்குமென தான் நம்புவதாக தான் நம்புவதாக ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளது.
இதனால் தான் முடக்கிய போராட்டம் இப்போது துவாராக அடையாளம் ஊடாக கிளரப்படுவதால் அதனையும் அடக்க அதிகாரத்திற்கு வர வேண்டுமென்ற செய்தியை கூச்சநாச்சமின்றி கிராம மட்ட சிங்கள பேரின வாத வாக்கு வங்கியை இலக்கு வைத்து ராஜபக்சக்கள் முன்னெடுத்துக் கொள்ளவும் கூடும்.
எனென்றால் அவர்களுக்கு அதிகாரத்தை எப்போதுமே இவ்வாறான புலிக்காய்ச்சல் எதிர்ப்பு நகர்வுகள் தேவைப்படுவதை கடந்த காலங்களிலேயே நன்றாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இது தொடர்பான விரிவான விடயங்களை எடுத்துக் கூறுகிறது இன்றைய செய்திவீச்சு....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்