சக்கரை நோய் பற்றிய கவலையா... இந்த யோகாசனம் செய்தால் போதும்
தற்போது அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் தொற்றாநோய்களில் சர்க்கரை நோய் முக்கியமான இடத்தில் உள்ளது.
இந்த சக்கரை நோய்க்கு பல்வேறு மருந்துகள் இருந்தாலும் ஜோகாசனம் மூலம் நல்ல முன்னேற்றத்தை காணலாம் யோகாசனம் என்பது உடல் உள நலன்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.
இதன் மூலம் உள அமைதி,மற்றும் உடல் வலிமை கிடைக்கிறது. உள்ளார்ந்த, வெளி உடல் உறுப்புகளுக்கும் யோகா செய்வதன் மூலம் உறுதி கிடைக்கிறது.
நாளமில்லா சுரப்பிகள்
இது உடல் உள்ளுறுப்புகளுக்கு நலன் தருவததோடு நாளமில்லா சுரப்பிகளை நன்று இயங்க செய்யும்.
மன அமைதி, தெளிந்த சிந்தனை ,மன உறுதி,என்பவற்றுக்கு உறுதுணையாக இருக்கும் இந்த யோகாசனம் மனிதனின் வாழ்நாளை கூட்டும் சக்தி படைத்தது.
அதிலும் ஒரு சிலயோகசானங்கள் சில நோய்களை குறைக்க பெரிதும் உதவுகின்றது.
அந்தவகையில் சர்க்கரை நோயை குறைக்கும் யோகசானம் ஒன்றினை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
