புலம்பெயர் தமிழர்களால் ஐ.நா மனித உரிமை பேரவை முன் வெடித்த ஆர்ப்பாட்டம்
ஐ.நா மனித உரிமை பேரவை முன்றலில் புலம்பெயர் தமிழ்மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (03) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழினத்தின் மீதான இன அழிப்பு மற்றும் ஒடுக்குமுறை நகர்வுகளுக்கு நீதிகோரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
மனித உரிமைப்பேரவை
இந்தநிலையில், ஐ.நா மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருவதனால் ஐ.நா முன்றலில் அமைந்துள்ள முருகதாசன் திடலில் இது குறித்த ஒன்று கூடலொன்று இடம்பெற்றுள்ளது.
முன்னதாக இந்த ஒன்று கூடலில் பங்கெடுப்பதற்கென பரிஸ் நகரின் கார் து லிஸ்றில் இருந்து ஜெனிவா நோக்கிப்பயணித்த அதிவேக தொடருந்தில் இரண்டு பெட்டிகள் செல்பவர்களுக்காக முன்பதிவு செயப்பட்டிருந்த நிலையில் போராட்டத்தில் பங்கெடுக்க சென்றவர்கள் இன்று காலை அங்கிருந்து பயணித்திருந்துள்ளனர்.
நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் இலங்கையில் முதன் முதலாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தமிழ் மக்களின் விடயத்தில் எந்தவித முன்னேற்றங்களும் ஏற்பட்டவில்லையென அனைத்துலக சமூகத்துக்கு செய்தி சொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
