தேர்தலை நடத்துங்கள் - அரசாங்கத்தை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளில் ஆர்ப்பாட்டம்..!
Sri Lanka
Tamil diaspora
SL Protest
New Zealand
Sri Lankan local elections 2023
By Dharu
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (05) நியூசிலாந்தின் ஒக்லாந்து நகரில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டி மக்களின் வாக்குரிமையை பறிக்காமல் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துங்கள் என தேசிய மக்கள் இயக்கத்தின் நியூசிலாந்து கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.
மக்களின் வாக்கு பலம்
மக்களின் வாக்கு பலம் இன்றி ஆட்சியாளர்கள் நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும், இளைஞர்களிடம் நாட்டை ஒப்படைத்து நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி