புலம்பெயர் தமிழர் விவகாரம் - ரணிலின் யோசனைக்கு ஆதரவு கிடைப்பதில் சிக்கல்
புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கான அலுவலகமொன்றை இலங்கையில் அமைப்பது தொடர்பான அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையில் குறித்த அலுவலகம் அமைக்கப்படுமாயின் அதற்கு எதிரான நடவடிக்கைகளை சிறிலங்கா பொதுஜன பெரமுன மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் இலங்கையில் யுத்தம் நிறைவு செய்யப்பட்டது. எனவே, புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கான அலுவலகத்தை இலங்கையில் அமைக்க முடியாது.
அதிபரின் யோசனைக்கு ஒரு கட்சியாகவும் அதன் அங்கத்தவர்களாகவும் நாம் ஆதரவு வழங்க மாட்டோம். அதிபர் வேறு ஒரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வருவதால் அவருடைய யோசனை வேறுபட்டதாகவே இருக்கும். எமது கட்சிக்கும் அதிபருடைய கட்சிக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.
எனினும், இலங்கையை கட்டியெழுப்புவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
பெரமுனவுக்கே மக்கள் ஆதரவு
ரணில் விக்ரமசிங்கவை அதிபர் பதவிக்கு தெரிவு செய்தது எமது கட்சி என்பதால், அவர் எமது கட்சிக்கு தேவையான வகையிலே செயற்பட வேண்டும்.
இலங்கையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கே இன்னும் மக்கள் ஆதரவு இருக்கிறது. நாளை இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டாலும் எமது பலத்தையும் மக்கள் ஆதரவையும் எம்மால் காட்ட முடியும்” என்றார்.
தொடர்புடைய செய்தி
சிறிலங்காவின் புலம்பெயர் அமைப்புகளின் தடைநீக்கம் - உலகத் தமிழர் பேரவை வெளியிட்ட தகவல்
புலம்பெயர் தமிழர் தடை நீக்கம்! சிறிலங்கா அரசாங்கத்தின் ஏமாற்று நாடகமே - பகிரங்க குற்றச்சாட்டு
YOU MAY LIKE THIS