பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பலி: தீபாவளியன்று நடந்த சோகம்
Diwali
India
By pavan
இந்தியாவின் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டிருந்த 04 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
தீபாவளி கொண்டாட்டம்
இதன்போது பட்டாசு வெடித்த குறித்த சிறுமி உடலில் தீபட்டு உயிரிழந்துள்ளார்.
அப்பகுதி சேர்ந்த ரமேஷ் - அஸ்வினி ஆகியோரின் மகள் நவிஷ்கா(4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து குறித்து வாழைப்பந்தல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்