கட்டுப்பாட்டை இழந்து டீசல் கொள்கலன் வாகனம் விபத்து!
டீசல் கொள்கலன் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலன் வாகனம் ஒன்று இன்று மாலை 5.00 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தினால் சில மணி நேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு முத்துராஜவெல பகுதியிலிருந்து கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டு செல்லும் போதே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கொள்கலன் வாகனம் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை மலிபன் தொழிற்சாலைக்கு அருகாமையில் பிரதான வீதியில் விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொள்கலன் வாகனத்தில் இருந்த டீசல் வெளியேறி வீதியில் பரவியுள்ளது. இவ் விபத்தில் சாரதியும், உதவியாளரும் படுங்காயங்களுடன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கொள்கலன் வாகனத்தில் 33,000 லீட்டர் டீசல் இருந்ததாக கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

