டீசல் விலையில் திடீர் மாற்றம்...பேருந்து கட்டணங்களில் மாற்றமா..! வெளியான தகவல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka
National Fuel Pass
By pavan
டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணங்களை குறைக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் விலையில் கணிசமான அளவு குறைக்கப்படாததால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டீசல் விலை குறைவினால் பஸ் கட்டணங்கள் திருத்தப்படுமா என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
டீசலின் விலை
இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் டீசலின் விலையானது 10 ரூபவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, தற்போது 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாகும்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்