Digital Economy மாற்றம் தொடர்பில் சபையில் எடுத்துரைத்த குகதாசன் எம்.பி
தேசிய எண்மிய பொருளாதார(Digital Economy) மாற்றத்தை விரைவுபடுத்துவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் எடுத்துறைத்துள்ளார்.
இது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர்,
''எண்மிய பொருளாதாரத்தின் முழுமையான பயனை வழங்குவதை உறுதிப்படுத்த, பின்வரும் நான்கு தூண் வரைபடம் முன்மொழியப்படுகிறது:
முதலாவதாக, இணையச் சட்ட ஆணைச் செயலாக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் சட்டம் வழியாக நம்பிக்கையை உருவாக்குதல்.
பயனருக்கான அறிவூட்டல்
இரண்டாவதாகப், பயனருக்கான அறிவூட்டல் மற்றும் ஒத்துழைப்பு, அடிப்படை உள்ளடக்கலுக்கான முயற்சி, இலக்கு வைக்கப்பட்ட சமத்துவத் திட்டங்கள் வழியாக திறன் இடைவெளியை நிரப்புதல்.

மூன்றாவதாகக கட்டாயத் தளத் தத்தெடுப்பு, அணுகலுக்கான பரவலாக்கம் ஆகியவற்றின் மூலம் ஒருங்கிணைந்த சேவை வழங்கல்.
நான்காவதாக விரைவுபடுத்தப்பட்ட உட்கட்டமைப்பு, Fintech ஒழுங்குமுறைத் தெளிவு,உலகளாவிய நிபுணத்துவத்தைப் பயன் படுத்துதல் வழியாக பொருளாதார முடுக்கம் மற்றும் Fintech ஒழுங்குமுறையை செயற்படுத்தல்.
இந்த அரசின் 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப் பட்ட 30 பில்லியன் ரூபா என்பது வெறுமனே ஒரு செலவு அல்ல.
இது ஓர் அடிப்படை முதலீடு மற்றும் பொருளாதார எதிர்காலத்திற்கான முற்பணம் ஆகும். எண்மிய பொருளாதாரத்தின் வெற்றியானது தொழில்நுட்பம் அல்லது நிதியை மட்டும் சார்ந்தது அல்ல.
மாறாக நம்பிக்கை, திறன் , ஒத்துழைப்பு ஆகிய மூன்று முதன்மையான கூறுகளைச் சார்ந்துள்ளது. எண்மிய இணைப்பு மற்றும் செயல்பாட்டு கல்வியறிவு ஆகியவை சலுகைகளாக அல்ல. அடிப்படை உரிமைகளாகக் கருதப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |