முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபத்தின் நினைவேந்தல்
புதிய இணைப்பு
முல்லைத்தீவு (Mullaitivu)- புதுக்குடியிருப்பில் (Puthukkudiyiruppu) தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நினைவேந்தல் இன்றையதினம் (26) இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு வர்த்த சங்க தலைவர் நீதன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அஞ்சலி திகழ்வில் தியாக தீபம் திலீபனின் திரு உருவ படத்திற்கு புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள், பொதுமக்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து உரையுடன் அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்தது.
மன்னார்
இதேவேளை, தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை(26) காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் AQWGDDதேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.
இதன் போது சுடர் ஏற்றப்பட்டு,மாலை அணிவித்து,மலர் தூவி அஞ்சலிசெலுத்தப்பட்டது. இதன் போது மத தலைவர்கள்,சமூக செயற் பாட்டளர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தியாக தீப திலீபனின் நினைவு ஊர்தி வவுனியாவில் (Vavuniya ) நேற்றையதினம் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து வவுனியாவிலிருந்து புறப்பட்டு ஏ9 வீதி ஊடாக மாங்குளம் வந்தடைந்து மாங்குளத்தில் இருந்து மல்லாவி சென்று மீண்டும் மாங்குளம் வந்தடைந்து ஏ9 வீதி ஊடாக நேற்று மாலை 5.30 மணியளவில் கிளிநொச்சியை வந்தடைந்துள்ளது.
நினைவு ஊர்தி
இந்நிலையில், கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால், முள்ளியவளை, ஒட்டுசுட்டான் மீண்டும் மாங்குளம் ஊடாக இன்றையதினம் 25.09.2024 கிளிநொச்சி வந்தடைந்து தியாகி திலீபனின் நினைவு ஊர்தி கனகாபுரம் மாவீரர் துயிலும் இல்லம் செல்லவுள்ளது.
இதனை தொடர்ந்து, அங்கு அஞ்சலி நடைபெற்ற பின்னர் பொது சந்தையில் அஞ்சலி நிகழ்வு இடம் பெறவுள்ளது.
அதன் பின்னர் நினைவு ஊர்தி யாழ்ப்பாணம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |