கனடாவில் சுட்டுகொல்லப்பட்ட இந்திய இளைஞர்...! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை
கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வான்கூவரைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான தில்ராஜ் சிங் கில் எனும் 28 வயது இளைஞரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பர்னபி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூடு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும், குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதிகாரிகள் சந்தேகம்
பிரிட்டிஷ் கொலம்பியா கும்பல் மோதல் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே, அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்ஸ்டன் தெருவில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த நிலையில், வாகனம் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடையதா என்ற சந்தேகத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |