கோட்டாபயவின் பதவி விலகல் கடித விவகாரம்! வெளியாகிய புதிய தகவல்
மூலப் பிரதி
கோட்டாபயவின் பதவி விலகல் கடிதத்தின் மூலப் பிரதியை சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் கொழும்புக்கு இராஜதந்திரி ஒருவர் கொண்டு வருவார் என தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூரிலுள்ள இலங்கைத்தூதரகம் இந்த கடிதத்தை கோட்டாபயவிடம் பெற்று உடனடியாக கொழும்புக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மேலும், பதவி விலகல் கடித விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபருடனும் சபாநாயகர் ஆலோசனை நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறன்றது.
நேற்று சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் அவரது கையொப்பத்துடன் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், அது மின்னஞ்சலில் வந்ததால் அதன் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் சபாநாயகர் தரப்பு ஆராய்ந்து வருகின்றது.
மூலப்பிரதி கிடைத்த பின்னரே அறிவிப்பு
மூலப்பிரதி கிடைத்த பின்னரே கோட்டாபயவின் பதவி விலகல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பை சபாநாயகர் வெளியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
