வவுனியா - யாழ். வீதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே யாழ். குடும்பஸ்தர் பலி
வவுனியாவில் (Vavuniya) துவிச்சக்கரவண்டியுடன் ஹயஸ் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து வவுனியா - யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை (04) இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் வீதியில் சென்று கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
காவல்துறையினர் விசாரணை
விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் யாழ்ப்பாணம் புளியங்கூடலை சேர்ந்த 69 வயதான இ.ஜெகதீஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
