இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர மட்டத்தில் தீர்வு: அரசாங்கம் உறுதி
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காண்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன்படி வெகுவிரைவில் தீர்க்கமான ஒரு தீர்மானத்தை இருத்தரப்புக்கும் இடையே எடுக்க எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எல்லை தாண்டிய பிரச்சினை
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவைப் பாதிக்கும் வகையில் அமையும் எல்லை தாண்டிய பிரச்சினைக்கு, மோதல்கள் இன்றி இராஜதந்திர மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் வெளிவிவகார அமைச்சு உறுதியாக உள்ளது.

இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவதால் வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் இந்தியத் தரப்பிற்குத் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகின்றது” எனவும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |