முல்லைத்தீவில் ஹெப் ரக வாகனம் மோதி வயோதிபர் உயிரிழப்பு
முல்லைத்தீவில் ஹெப் ரக வாகனம் மோதி துவிச்சக்கர வண்டியில் பயணித்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (23.11.2026) மாலை 6.30 மணியளவில் முல்லைத்தீவு – வட்டுவாகல் வீதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய சங்கரப்பிள்ளை செல்லத்துரை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு நகரிலிருந்து வட்டுவாகல் நோக்கிப் பயணித்த ஹெப் ரக வாகனம், முன்னால் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வயோதிபர் வீதியின் மறுபக்கத்திற்குத் திரும்ப முற்பட்டபோது அவர் மீது மோதியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது படுகாயமடைந்த வயோதிபர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற முல்லைத்தீவு போக்குவரத்துப் காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பில் பரபரப்பு : வெளிநாட்டில் மனைவிக்கு சித்திரவதை : குழந்தைகளுடன் வாவியில் குதிக்க முயன்ற தந்தை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |