இன்று முதல் இந்தியா- சீனா இடையே நேரடி விமான சேவை
கொரோனா தொற்றின் தாக்கத்தால் 2020ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனா இடையிலான நேரடி விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
பின்னர், லடாக் எல்லை பிரச்சனை காரணமாக அந்த சேவையை மீண்டும் தொடங்குவதில் தடைகள் ஏற்பட்டன. ஆனால் சமீபத்தில், அமெரிக்காவுடன் நிலவும் பதற்றத்துக்கிடையில் இந்தியா–சீனா உறவில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டன.
மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசியது இதற்கு வழிவகுத்தது.

Image Credit: Asia Times
இதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
அதன்படி, கடந்த மாதம் கொல்கத்தா–குவாங்சூ வழித்தடத்தில் இண்டிகோ நிறுவனம் தனது சேவையை தொடங்கியது.
நேரடி விமான சேவை
தற்போது, சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு சீன நிறுவனம் ஒன்றும் இந்தியாவுக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது.

Image Credit: Aviation A2Z
ஷாங்காய்–டெல்லி இடையேயான இந்த பயணிகள் விமான சேவையை சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் இன்று முதல் இயக்கத் தொடங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |