இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளரின் நியமனம்! சபையில் கொந்தளிப்பு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவின் நியமனம் அரசியலமைப்பு பேரவைக்குட்பட்டது என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த நியமனத்தில் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்நதார்.
ஆணைக்குழுவின் தற்போதைய பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க, ஜே.வி.பியின் சட்டப் பிரிவின் உறுப்பினர் என ஜே.வி.பியின் முன்னாள் பொதுச் செயலாளர் நந்தன குணதிலக தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
முஜிபுர் ரஹ்மான் கேள்வி
இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று சபையில் கேள்வியெழுப்பியிருந்தார்.
இது ஒரு தீவிரமான பிரச்சினை என முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டிய நிலையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இவ்விடயம் பொருத்தமற்றதாக கூறி கேள்வியைத் தடுத்திருந்தார்.
எனினும், முஜிபுர் ரஹ்மானின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, “ஐக்கிய மக்கள் சக்திக்கு என்ன நடந்தது? நீங்கள் ஒரு காலத்தில் ஒரு முக்கியமான அரசியல் கட்சியாக இருந்தீர்கள், அல்லவா? ஏன் தேவையற்ற விடயங்களை தேடுகிறீர்கள்” என விமர்சித்தார்.
எவ்வாறாயினும், சபை நடவடிக்கைகளின் முடிவில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவின் நியமனம் அரசியலமைப்பு பேரவைக்குட்பட்டது என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
