நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்
சிறுநீரக நோயாளர்கள், ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளை முன்பைப் போலவே வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இவர் தனது டுவிட்டர் பக்கத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கொடுப்பனவுகள்
(2/2) The payments will be made in the coming days. Elderly Allowances will be available from Post Offices and Disability and Kidney Allowances from Divisional Secretariats. pic.twitter.com/p3QgUJRet5
— Shehan Semasinghe (@ShehanSema) August 16, 2023
அதன்படி, 647 683 பேருக்கு முன்பைப் போலவே கொடுப்பனவுகள் வழங்கப்படுவதோடு அடுத்த சில நாட்களில் பணம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, காத்திருப்போர் பட்டியல் உட்பட 517,962 பேருக்கு முதியோர் கொடுப்பனவும், 88,602 பேருக்கு ஊனமுற்றோருக்கான கொடுப்பனவும், 41,119 பேருக்கு சிறுநீரக நோயாளர் கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், முதியோர் கொடுப்பனவு அஞ்சல் அலுவலகங்களிலும் ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக கொடுப்பனவு பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.