பின்னடைவுகள் பயணத்தின் ஒரு பகுதியாகும்- ஜனாதிபதி கோட்டாபயவின் கருத்து
“பின்னடைவுகள் பயணத்தின் ஒரு பகுதியாகும்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த பின்னடைவுகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு துணிச்சலான தீர்மானங்களை எடுக்கக் கூடியவராக தலைவர் ஒருவர் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இராணுவ அதிகாரியின் வாழ்க்கையில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று உயர் ஒழுக்கம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தியத்தலாவயில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,. ஒரு தனிநபராக ஒருவர் எவ்வளவு திறமையாக இருந்தாலும் மற்றவர்களின் ஆதரவின்றி அவரால் வெற்றியடைய முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிகழ்வில் ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.