கொழும்பில் கொல்லப்பட்ட சீன பிரஜை : வெளிவரும் அதிர்ச்சி தகவல்
கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீன பிரஜை தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி கொல்லப்பட்ட கோடீஸ்வரரான சீன பிரஜை இணையக்குற்றவலையமைப்பில் முக்கிய புள்ளி என தெரியவந்துள்ளது.
சர்வதேச கணினி குற்ற வலையமைப்பின் தலைவரும் கோடீஸ்வரருமான ஹாவோ போன் என்ற சீனப் பிரஜையே கொல்லப்பட்டவராவார்.
இந்த கொலை சம்பவத்திற்குப் பின்னால் சர்வதேச மாஃபியா கும்பல் ஒன்று இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பணம் தொடர்பான கடுமையான தகராறு
கணினி குற்றங்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் தொடர்பான கடுமையான தகராறு இந்த மனிதாபிமானமற்ற கொலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குற்றத்தில் சுமார் இருபது சீனப் பிரஜைகள் சம்பந்தப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த அன்று நண்பர்களாக நடித்த இரண்டு சீனப் பிரஜைகள் பாதிக்கப்பட்ட கோடீஸ்வரரை துறைமுக நகரில் உள்ள ஒரு பாலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கொடூரமான சித்திரவதைகளைச் செய்து, வெட்டி கொலை
அவர்கள் ஒன்றாக மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சீனக் கும்பல் அவரைக் கடத்திச் சென்றுள்ளது. அதன் பின்னர் எஹலியகொட கரதன பிரதேசத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கைகால்களைக் கட்டி, கொடூரமான சித்திரவதைகளைச் செய்து, வெட்டி கொலை செய்து உடலை கற்களால் மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் எஹலியகொட காவல்துறையினர் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |