நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்...!
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் காணப்படும் புத்தாண்டு தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையின் விசேட சோதனை மற்றும் விசாரணைகளின் பணிப்பாளர் சஞ்சய் வீரசிங்க கூறுகையில்,
"இந்நாட்களில் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கொள்வனவு செய்வதில் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுவதால், தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறான பண்டிகைக் காலங்களில் தள்ளுபடி பொருட்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விலையில் உள்ள வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, தள்ளுபடி செய்யப்பட்ட பொருட்களின் தரம் குறித்தும் சிந்திக்க வேண்டும்." என்றார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |