இந்தியாவில் தரமற்ற மருந்துகள் விற்பனை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இந்தியாவில் (India) தயாரிக்கப்படும் 52 மருந்து வகைகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த தரமற்ற மருந்து வகைகளில் 50 மருந்துகள், காய்ச்சல் மருந்து,வயிற்றுப் பிரச்சினைக்கான மருந்து மற்றும் ஆன்டிபயோடிக் மருந்துகள் போன்றவையும் உள்ளடங்குகின்றன.
தரமற்ற மருந்துகள்
இதேவேளை, விட்டமின், கல்சியம், சத்து மாத்திரைகள், ஹைப்பர் டென்ஷனுக்கான மருந்துகள், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைக்களுக்கான மருந்துகள் போன்றவையும் உள்ளன.
இந்த 52 தரமற்ற மருந்துகளில் 22 மருந்துகள் இமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகின்றன.
மேலும், ஜெய்ப்பூர், குஜராத் (Gujarat) , இந்தோர், ஆந்திரப்பிரதேசம், ஐதராபாத் (Hyderabad) உள்ளிட்ட பிரதேசங்களில் மீதமுள்ள மருந்துகள் தயாரிக்கப்பட்டு மருத்துவமனைகள், மருந்தகங்களில் விநியோகம் செய்யப்படுகின்றன.
எச்சரிக்கை
இந்தநிலையில், குறித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
ஏற்கனவே சந்தையிலுள்ள தரமற்ற 52 மருந்துகளை திரும்பப் பெறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் இமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட 120 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |