நாட்டை நேசிக்கும் தலைவர் குறித்து கலந்துரையாடல் ஆரம்பம் - முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தகவல்
நாட்டை நேசிக்கும் மற்றும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய மக்கள் சார்பு தலைவனை எதிர்காலத்தில் காண வேண்டும் என்று வண. முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹன்பிட்டியவில் உள்ள அபயராம விகாரையில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வயிற்றை நிரப்ப மக்கள் தங்கள் பெல்ட்களை இறுக்கச் சொன்ன ஒரு தலைவர் நாட்டுக்கு பயனற்றவர் என்று அவர் கூறினார். புதிய தலைவர் நாட்டில் உள்ள சொத்துக்களை விற்கும் நபராக இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, நாட்டை முன்னோக்கி நகர்த்த சிறந்த தலைவர் யார் என்பது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக அரசாங்கம் மீது கடுமையான விமர்சனங்களை வண.முருந்தெட்டுவே ஆனந்த தேரர் முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.