தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்
Tamils
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Sathangani
10 months ago
இலங்கையின் (Sri Lanka) எதிர்வரும் அதிபர் தேர்தலில் (Presidential Election) தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.
வவுனியாவில் (Vavuniya) அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (29) குறித்த கலந்துரையாடல் நடைபெறுகின்றது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ்தேசியக் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் பங்குபற்றியுள்ளனர்.
தழிழ் அரசியல் வாதிகள்
அந்த வகையில் குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சி.வி.விக்கினேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், என்.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், க.துளசி, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தை சேர்ந்த பொ.ஜங்கரநேசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




மரண அறிவித்தல்